Home இந்தியா தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் உள்பட 2 பேருக்கு அசோக் சக்ரா விருது!

தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் உள்பட 2 பேருக்கு அசோக் சக்ரா விருது!

580
0
SHARE
Ad

mugunthanபுதுடெல்லி, ஜனவரி 26 – காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன் மற்றும் நாயக் நீரஜ்குமார் சிங் ஆகியோருக்கு மத்திய அரசு உயரிய அசோக் சக்ரா விருதினை அறிவித்துள்ளது.

இன்று நடைபெறும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் வழங்கப்படும். கடந்த ஆண்டு தீவிரவாதிகளுடன் நடந்த போரின் போது 2 தீவிரவாதிகளை உயிரிழப்பதற்கு முன்பு சுட்டு வீழ்த்தினார் முகுந்த் வரதராஜன்.

குப்வாரா மாவட்டத்தில் உள்ல கலரூஸ் வனப்பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி நடந்த மோதலின்போது ஒரு தீவிரவாதக் குழுவை வழிமறித்து தீரத்துடன் சண்டையிட்டார் தீரஜ் சிங்.

#TamilSchoolmychoice

அப்போது நான்கு தீவிரவாதிகளை அவர் சுட்டு வீழ்த்தினார். இதற்காக அவர்கள் 3 பேருக்கு கீர்த்தி சக்ரா விருதும், 12 பேருக்கு செளர்ய சக்ரா விருதும் வழங்க இந்திய அரசு அறிவித்துள்ளது.