Home கலை உலகம் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ‘கலைப்புலி’ எஸ்.தாணு தேர்வு!

தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக ‘கலைப்புலி’ எஸ்.தாணு தேர்வு!

756
0
SHARE
Ad

kalaipuli-thanuசென்னை, ஜனவரி 26 – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 565 வாக்குகள் பெற்று தலைவராக கலைப்புலி தாணு வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நேற்று தேர்தல் நடைபெற்றது. ஓட்டுப்போட தகுதி உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 967 பேர்.

இவர்கள் அனைவரும் ஓட்டுப்போட்டு ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், ஒரு பொருளாளர் மற்றும் 21 செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.

#TamilSchoolmychoice

தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், மன்சூர் அலிகான் உட்பட 5 பேர் போட்டியிட்டனர். ஓட்டுப்பதிவு சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 3 மணி வரை நடைபெற்றது.

4 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மொத்தம் 776 வாக்குகள் பதிவானது. அதில் 565 வாக்குகள் பெற்று கலைப்புலி தாணு வெற்றி பெற்றார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார்.