புதுடெல்லி, ஜனவரி 27 – நேற்று இந்தியா தனது 66-வது இந்திய குடியரசு தின விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது. விழாவின் உச்சகட்டமாக அமைந்தது அமெரிக்க அதிபரின் சிறப்பு வருகை.
இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் முதல் அமெரிக்க அதிபராக ஒபாமா திகழ்கின்றார்.
அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவுக்கு வெளியே இன்னொரு நாட்டில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் திறந்த வெளியில் அமர்ந்து, ஒபாமா, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இதுதான் முதன் முறை.
இதன் மூலம், அமெரிக்க பாதுகாப்புத் துறையின் சிறப்பான செயல்படும் திறனையும் இந்தியாவின் பாதுகாப்புத் திறனையும் ஒபாமாவின் வருகை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது.
இந்தியக் குடியரசு தின அணிவகுப்புப் படங்கள்:-
இந்தியாவின் சட்டமேதையும், இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்களில் ஒருவருமான அம்பேத்காரின் உருவப் படத்தோடு ஊர்வலக் காட்சி…
அமெரிக்க அதிபரையும் கவர்ந்த மோட்டார் சைக்கிள் சாகச வீரர்களின் அணிவகுப்பு….
அணிவகுப்பில் கலந்து கொண்ட வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட ஒரு வாகனம்….
ஒரே மாதிரியான தலைப்பாகையோடு கம்பீரமாக அணிவகுத்துச் செல்லும் ஒரு படைப் பிரிவினர்….
இராணுவப் படைப் பிரிவு ஒன்றின் அணிவகுப்புக் காட்சி…
படங்கள்: EPA