பாக்தாத், ஜனவரி 27 – துபாய் விமானப் போக்குவரத்து கழகத்தின் மலிவு விலை விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான ஃபிளைதுபாய் FZ215 விமானம், பாக்தாத் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சி செய்த போது, அதன் மேல் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. என்றாலும், இரண்டு பயணிகள் லேசான காயங்களுக்கு உள்ளாகியதாக அந்நாட்டின் முக்கிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்து வந்தன என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
இந்த சம்பவத்தால் ஃபிளை துபாய், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ், ஷார்ஜா ஏர் அரேபியா மற்றும் அபுதாபி எத்திஹாட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களின் விமானங்கள் உடனடியாக சேவை நிறுத்தம் செய்யப்பட்டன.