Home உலகம் இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்! 

இந்தியா-அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்! 

505
0
SHARE
Ad

house_floorவாஷிங்டன், ஜனவரி 30 – இந்தியா – அமெரிக்கா இடையேயான நீடித்த நட்பு 21-ஆம் நூற்றாண்டு வளமானதாக மாற்றும். அதனைத் தொடர்வது அவசியமானது என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமராக மோடி பதவி ஏற்றதற்குப் பிறகு, மோடியின் அமெரிக்கப் பயணமும், ஒபாமாவின் சமீபத்திய இந்தியப் பயணமும், இரு நாடுகளுக்கு இடையே நீடித்த நல்லுறவை ஏற்படுத்தி உள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள இந்த நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானம் கடந்த 27-ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன்மொழியப்பட்டது.

#TamilSchoolmychoice

இதனை காங்கிரஸ் சபையின் உறுப்பினர் ஜோசப் க்ரோலே தொடங்கி வைத்தார். அதில், “இந்தியா- அமெரிக்கா இடையேயான நீடித்த நட்பு 21-ஆம் நூற்றாண்டு வளமானதாக மாற்றும்”.

us“இரு நாடுகளும் பல்வேறு விவகாரங்களில் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டு வருகிறன. அரசியல் உறுதிபாட்டுடனும், ஜனநாயகத்துடனும் இந்த இரு நாடுகளைப் போல வேறு எவராலும் செயல்பட முடியாது”.

“பாதுகாப்பை வலுப்படுத்துதல், அனைத்துலக பாதுகாப்பு, வறுமை ஒழிப்பு, கல்வி, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து பணியாற்ற வேண்டும். அவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்” என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தினவிழாவிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வந்திருந்த பொழுது, அவருடன் அமெரிக்க காங்கிரஸ் சபையின் உறுப்பினர் க்ராளே உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவும் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.