Home இந்தியா மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்களில் சிலை!

மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு கோயில்களில் சிலை!

562
0
SHARE
Ad

Tamilஉத்திர பிரதேசம், ஜனவரி 30 – மகாத்மா காந்தியின் நினவு தினமான இன்று அவரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு சிலை கோவில்களில் நிறுவப்படும் என்று இந்து மகாசபை அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினம் தியாகிகள் தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்றைய தினம் காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவிற்கு நாடு முழுவதும் சிலை நிறுவப்படும் என்று அகில இந்திய இந்து மகாசபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தாப்பூர் மாவட்டத்தில் கோட்சேவுக்கு கோயில் அமைக்கவும், மீரட்டில் சிலை நிறுவவும், இடம் தேர்வு செய்யப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

இதில் பங்கேற்ற இந்து மகாசபை நிர்வாகிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட கூடும் என்பதால் அந்த இடங்களுக்கு சீல் வைத்த உத்திரபிரதேச  அரசு இருபகுதிகளிலும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

p30aஇந்நிலையில் நாதுராம் கோட்சேவின் சிலையை கோவில்களில் நிறுவ இந்து மகாசபை முடிவு செய்துள்ளது. இதற்காக ஜெய்ப்பூரில் 500 சிலைகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ரகசியமாக நடைபெற உள்ள இந்த பணிக்கு கோயில் நிர்வாகிகளும், சாதுக்களும் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் கோட்சேவின் சிலை மற்ற இந்து கடவுளுக்கு நிகராக அமைக்கப்படாது என்று இந்து மகாசபை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்து மகாசபையின் இந்த செயல்பாடு காந்தியாவாதிகள் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.