Home கலை உலகம் இன்று வெளியாகும் ‘இசை’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா சிறப்பு பேட்டி!

இன்று வெளியாகும் ‘இசை’ படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா சிறப்பு பேட்டி!

1034
0
SHARE
Ad

DSC_9601சென்னை, ஜனவரி 30 – அஜித், விஜய் என இரு பெரும் துருவங்களின் சினிமா பயணத்தில் மைல் கல்லை உருவாக்கியவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. வித்தியாசமான கதை, இளைஞர்களை சுண்டி இழுக்கும் வசனங்கள் என இப்போதும் இவருக்கு ரசிகர்கள் குறையவில்லை.

அப்படிப்பட்டவர் பத்து வருடம் கழித்து இப்போது 4 வருட கடும் உழைப்பிற்கு பிறகு தனது ‘இசை’ படத்தை முழுமையாக முடித்து இன்று வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது; “சில காரணங்கள், பல படத்தில் நடிக்க சென்றேன். அது தவறு என அறிந்ததும் மீண்டும் இயக்குநராக மாறியுள்ளேன்”.

#TamilSchoolmychoice

“இசை படத்துக்காக நானே இசை அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆகையால் பல இசைகளை கத்துக்க வேண்டிய காரணத்தால் இப்படம் 4 வருடம் ஆகிவிட்டது”.

“என்னை இப்படத்திற்கு இசையமைக்க சொன்னவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் இசையை கேட்டவுடன் மனம் திறந்து பாராட்டினார் ஏ.ஆர்.ரகுமான் என கூறினார் நடிகர், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.

DSC_9613மேலும், அஜித், விஜய் என்ன சொன்னார்கள்? என்று கேட்டபோது, எஸ்.ஜே.சூர்யா கூறியதாவது, “எல்லாரும் அஜித் ,விஜய்க்கு நான் வாழ்க்கை கொடுத்ததா சொல்றாங்க”.

“எனக்குதான் அவங்க ரெண்டு பேரும் வாழ்க்கை கொடுத்துருக்காங்க. அதுலயும் விஜய் பெரிய கதாநாயகர் இன்னும் எனக்காக அவர் மனசுல இவ்ளோ பெரிய இடம் கொடுத்திருப்பார்னு நான் நினைக்கவே இல்ல”.

“இத்தனை வருடம் கழித்து ஒரே வார்த்தையில் நான் 10 வருடம் சினிமாவில் இல்லை என்பதை மக்கள் மறக்கும் அளவிற்கு பேசினார் விஜய். நான் கடந்து வந்த பாதைக்கு முதல் விதை போட்டவர் அஜித்”.

“நல்ல மனிதர். இப்போது சிறிது நாளாக தன்னை தனிமை படுத்திக்கொண்டார். அவருடைய செல்பேசியைக் கூட பயன்படுத்துவதில்லை என கூறினார் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.