Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் சியாவுமி விற்பனை இனி புதிய தளத்தில்!

இந்தியாவில் சியாவுமி விற்பனை இனி புதிய தளத்தில்!

611
0
SHARE
Ad

mi-4-mainபெய்ஜிங், ஜனவரி 30 – இந்தியாவில் இதுவரை சியாவுமி நிறுவனம், தனது திறன்பேசிகளை ‘பிளிப்கார்ட்’ (Flipkart) இணையதளம் மூலமாகவே விற்பனை செய்து வந்தது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் திறன்பேசிகள், இந்தியர்களிடையே நன்கு பிரபலமடைந்து இருப்பதால், தற்போது தனது விற்பனையை Mi.com என்ற சொந்த இணைய தளம் மூலம் தொடங்க இருக்கின்றது.

இது தொடர்பாக சியாவுமி இந்தியா பிரிவின் தலைவர் மனு ஜெய்ன் கூறுகையில், “இந்தியா எங்கள் நிறுவனத்திற்கான மிக முக்கிய சந்தையாகும். இந்தியாவில் எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு திருப்பதிகரமாக இருப்பதற்கு நாங்கள் நீண்ட செயல்திட்டங்களைக் கொண்டுள்ளோம்.”

#TamilSchoolmychoice

“அதன் முதற்கட்டமாக, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில்,  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை அமைக்க இருக்கின்றோம். சீனாவிற்கு வெளியே, சியாவுமி அமைக்க இருக்கும் முதல் மையம் இதுவாகும்”

“இந்த மையத்தின் முக்கிய நோக்கம் இந்திய பயனர்களுக்கு தேவைப்படும் வசதிகள் மற்றும் அம்சங்களை ஆராய்ந்து, அதற்கு தகுந்த தயாரிப்புகளை வழங்குவதே ஆகும்” என்று அவர் கூறியுள்ளார்.

எனினும், பெங்களூருவில் அமைய விருக்கும் மையத்தில் சியாவுமி ஏற்படுத்த இருக்கும் முதலீடுகள் குறித்தும், பணியாளர்கள் குறித்தும் அவர் கருத்துக்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான சியாவுமி, மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பல வருடங்களாக, இந்தியாவில் கோலோச்சி வந்த சாம்சுங், சியாவுமியின் வரவிற்கு பிறகு சற்றே தடுமாறத் தொடங்கி உள்ளது. ஐபோன் 6-ற்கு போட்டியாக சியாவுமி உருவாக்கியுள்ள உள்ள ‘எம்ஐ 4’ (Mi 4) திறன்பேசிகள், கடந்த புதன் கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

ரூபாய் 19,999 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த திறன்பேசிகளுக்கு பயனர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.