Home நாடு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் செலவுகளை அரசு ஏற்றது – சாமிவேலு பெருமிதம் (காணொளி வடிவில்)

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் செலவுகளை அரசு ஏற்றது – சாமிவேலு பெருமிதம் (காணொளி வடிவில்)

644
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 30 – 9-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு இன்று காலை கோலாலம்பூர் மலாயா பல்கலைக் கழகத்தில் கோலாகலமாக தொடங்கியது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பேசிய உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு, தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது அத்தனை சிறப்பாக இருக்காது என்று கூறி தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து பேசுவதாக தனது உரையைத் துவங்கினார்.

அதில், இந்த மாநாட்டிற்குத் தேவையான அத்தனை செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்ளும் என்று பிரதமர் நஜிப் துன் ரசாக் கூறியதாக பெருமையுடன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

சாமிவேலுவின் உரையை காணொளி வடிவில் காண கீழேயுள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்: