Home வாழ் நலம் தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது பொன்னாங்கண்ணி கீரை!

தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது பொன்னாங்கண்ணி கீரை!

1302
0
SHARE
Ad

dwarf2ஜனவரி 30 – பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். எனினும் அதில் பொதிந்துள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி சீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதுபோலவே மஞ்சள் கரி சாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது.

பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது மன்னர்களுக்குக் கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது.

#TamilSchoolmychoice

ஆனாலும் இறைவன் அதை ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்து வைத்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.

நவீன மருத்துவத்தில் கோல்ட் குளோரைடு என்று தங்கத்தை உப்பு நிலையில் மாற்றி மருந்தாகக் கொடுப்பர்.  இது உடல் வலியைப் போக்கக் கூடியது மட்டுமின்றி உடலுக்கு பலத்தையும் தரவல்லது.

பொன்னாங்கண்ணி பித்தப்பை சீர்பெற இயங்கச் செய்யக் கூடியது. பொன்னாங்கண்ணி தூக்கத்தை தூண்டக் கூடியது. மத்திய நரம்புக் கூட்டத்தை சீர் செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் இல்லாமல் போகின்றன.

பொன்னாங்கண்ணி ஞாபக சக்தியைத் தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்க கூடியது. பொன்னாங்கண்ணி சாறு, பாம்புக் கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது.

Ponnanganni-Keerai-Pinkஎவ்வகையிலேனும் ஏற்படும் ரத்த வாந்தியை நிறுத்தக் கூடியது. பொன்னாங்கண்ணி ஈரலை பலப்படுத்த வல்லது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக்கூடியது.

பொன்னாங்கண்ணிக் கீரையை உள்ளுக்கு சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும்.

உடலும் உஷ்ணம் நீங்கி குளிர்ச்சி பெறும். பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் ரத்த அழுத்தம் குறையும். இரையரைக் கோளாறுகள் இல்லாமல் போகும்.

கொனேரியா என்னும் பால்வினை நோய் குணமாகும். பொன்னாங்கண்ணிக் கீரை ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.

பொன்னாங்கண்ணிக்கீரை பொன்மேனி தருவதோடு கண்களுக்கு நன்மையும், தலைமுடிக்கு வளத்தினையும், ரத்தப் பெருக்கையும், உடல் குளிர்ச்சியையும் தரக் கூடிய பொன்னான கீரை என்பதை நினைவில் நிறுத்தி நித்தமும் பயன்படுத்துவோர் நூறாண்டு வாழ்வர்.