Home கலை உலகம் ‘அனிருத் லைவ் 2015′ – நேற்று வரை 5000 டிக்கெட்டுகள் விற்பனை!

‘அனிருத் லைவ் 2015′ – நேற்று வரை 5000 டிக்கெட்டுகள் விற்பனை!

568
0
SHARE
Ad

Aniruth Liveகோலாலம்பூர், ஜனவரி 31 – சன்வே லாகூனில் இன்று மாலை நடைபெறவுள்ள இளம் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்ளும் மாபெரும் இசை நிகழ்ச்சியான ‘அனிருத் லைவ் 2015′ நிகழ்ச்சிக்கு நேற்று வரை 5000 டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான கோல்டன் கூஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தலைவர் கே.யோகசெல்வன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “இதுவரை 5000 ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். அனைத்துலக தரத்தைக் கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இன்னும் நிறைய ரசிகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றோம். இந்தியாவிலிருந்து இந்நிகழ்ச்சியைக் காண 200 பேரும், சிங்கப்பூரில் இருந்து 15 பேரும் வருகின்றார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இந்த மூன்றரை மணி நேர நிகழ்ச்சியில், அனிருத்துடன் சூப்பர்ஃப்ளை மியூசிக், ஸ்டார் சவுண்ட், டவுன் ஹால், சைக்கோ யூனிட் ஆகிய உள்ளூர் இசைக் குழுவினரும் பங்கேற்கின்றனர்.

#TamilSchoolmychoice

இதுதவிர, சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் இன்னோ கெங்கா போன்ற அனைத்துலக அளவில் பிரபலமான பாடகர்களும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.