Home கலை உலகம் அனிருத் லைவ் 2015: ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது!

அனிருத் லைவ் 2015: ரசிகர்களின் கரகோஷத்தில் அரங்கம் அதிர்ந்தது!

600
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 2 –  அப்பப்பா… மிகக் குறுகிய காலத்தில் இந்த இளைஞனுக்குத் தான் உலகெங்கும் எத்தனை லட்சம் ரசிக -ரசிகைகள்.

அனிருத் மீதான மலேசிய ரசிகர்களின் அன்பை, நேற்று முன்தினம் இரவு, கோலாலம்பூர் சன்வே லாகூனில் நடைபெற்ற ‘அனிருத் லைவ் 2015’ என்ற நிகழ்ச்சியில் காண முடிந்தது.

மாலை 8 மணிக்கெல்லாம் சுமார் 2000 – த்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் சன்வே லாகூன் சர்ஃப் பீச் ரிசோர்ட் நிரம்பி வழிந்தது. 3 மணி நேர நிகழ்ச்சியை நின்று கொண்டே காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் இளைஞர் பட்டாளம் இடைவிடாத கோஷங்களுடனும், ஆட்டம் பாட்டங்களுடன் மகிழ்ச்சியில் குதூகலிப்பதைக் காண முடிந்தது.

#TamilSchoolmychoice

என்றாலும், நீண்ட நேரம் நின்று கொண்டே இருந்ததால் சில பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களை அங்கிருந்த காவலர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி முதலுதவி அளித்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியப் பிரமுகர்களுக்கு மேடைக்கு அருகே வட்ட மேசையுடன் கூடிய இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் கீதாஞ்சலி ஜி உள்ளிட்ட சில மலேசியப் பிரபலங்கள் அமர்ந்திருந்தனர்.

IMG_7449

உள்ளூர் ராப் இசைக் குழுக்களான சூப்பர்ஃப்ளை மியூசிக், ஸ்டார் சவுண்ட், டவுன் ஹால், சைக்கோ யூனிட் ஆகியோருக்கும் பார்வையாளர்கள் மத்தியில் கரகோஷங்களுடன் கூடிய பலத்த வரவேற்பு கிடைத்தது.

இன்னும் சில நிமிடங்களில் அனிருத் மேடையில் தோன்றுவார் என ராப் பாடகரும், நிகழ்ச்சியின் அறிவிப்பாளருமான பாலன் காஷ்மீர் அறிவித்தவுடன், அரங்கமே அதிர்ந்தது.

அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில், 10-க்கும் மேற்பட்ட பெண்கள் நடனமாட நடுவில் அனிருத். ‘அனிருத்’ ‘அனிருத்’ என்று காதைப் பிளக்கும் அளவிற்கு பெண்களிடத்திலிருந்து கோஷங்கள் எழுந்தன.

அந்த கோஷங்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அனிருத் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த தான் இசையமைத்த படங்களான வேலை இல்லா பட்டதாரி, கத்தி, எதிர்நீச்சல் போன்ற படங்களில் இருந்து பாடல்களைப் பாடி மக்களை உற்சாகமூட்டினார்.

ஒட்டுமொத்த நிகழ்ச்சியிலும், பாடல்களின் இசை மட்டும் அதிரும்படியாகவும், பாடகர்களின் குரல் சரியாகக் கேட்காமலும் இருந்தது தான் அங்கு வந்திருந்த பெரும்பாலோனோரின் புலம்பலாக இருந்தது.அதே வேளையில் புகைப்படம் எடுப்பவர்களுக்குத் தேவையான ஒளி அமைப்பும் சரியாகக் கிடைக்கவில்லை.

எனவே இனி வரும் நிகழ்ச்சிகளில் ஒளி, ஒலிக் கருவிகளின் அமைப்பில் ஏற்பாட்டாளர்கள் கவனமுடன் கையாள்வது சிறப்பு.

‘அனிருத் லைவ் 2015’ நிகழ்ச்சியின் படக்காட்சிகள் உங்கள் பார்வைக்கு:

IMG_7607

(அரங்கம் அதிர மேடையில் அனிருத்)

IMG_7494

(ரசிகர்களிடத்தில் மிகவும் வரவேற்பு பெற்ற பாடல்களைப் பாடும் அனிருத்)

IMG_7374

(மலேசியக் கலைஞர்கள் ஸ்டைலோ மன்னவன் மற்றும் சைக்கோ மந்த்ராவின் பாடல்)

IMG_7423

(சைக்கோ யுனிட் சீஸே, ராபிட் மேக் குழுவினர் ‘நான் வந்துட்டேன்’ பாடலைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்)

IMG_7446

(மாமன் ஓட்டாண்டி பாடலைப் பாடி ரசிகர்களைப் பரவசப்படுத்திய பிரபல பாடகர் இன்னோ கெங்கா)

– ஃபீனிக்ஸ்தாசன்