Home அவசியம் படிக்க வேண்டியவை வியக்கவைக்கும் கூகுளின் மனித தோல் ஆராய்ச்சி!

வியக்கவைக்கும் கூகுளின் மனித தோல் ஆராய்ச்சி!

729
0
SHARE
Ad

labகோலாலம்பூர், ஜனவரி 31 – 20 வருடங்களுக்கு முன் புற்றுநோய் என்பது ஆட்கொல்லி நோயாகவே பார்க்கப்பட்டு வந்தது. தற்காலத்தில், அதற்கான மருந்துகள் கண்டறியப்பட்டாலும், நோய் தாக்கத்தை பொறுத்து மரணம் என்பது நிச்சயமான ஒன்றாகவே உள்ளது.

இந்நிலையில், புற்றுநோய் உட்பட பிற நோய்கள் மனித உடம்பில் எந்தப் பகுதியில், குறிப்பாக எந்த செல் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என கண்டறிந்தால், அதற்கான மருந்துகள் மூலம் நோயாளிகளை விரைவாக குணப்படுத்த முடியும்.

மனித செல்களில் நோய் கிருமிகளை கண்டறிவது அசாதாரணமான ஒன்று. இந்நிலையில், கடந்த வருடம் இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருவதாக கூகுள் அறிவித்தது.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட அந்த ஆராய்ச்சியில், செல்களை ஆராய மனித உடம்பிற்குள் செலுத்தக் கூடிய காந்தத் தன்மை கொண்ட நானோ துகள்களை கூகுள் உருவாக்கி உள்ளது.

அந்த நானோ துகள்களை, தொடர்புகொள்ளவும், கட்டுப்படுத்தவும் பிரத்யேக கைப்பட்டை ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கைப்பட்டை மனித தோல் வழியாக ஒளியை பாய்ச்சி, நானோ துகள்களைக் கட்டுப்படுத்தும்.

இந்த நானோ துகள்களை மாத்திரைகளுடன் இணைத்து மனிதர்களுக்கு கொடுக்கலாம். அவை மனித உடம்பிற்குள் சென்று நோய்கிருமிகளால் பாதிப்படைந்துள்ள செல்களை பற்றிய தகவல்களை நமக்கு அளிக்கும்.

உதாரணமாக, புற்றுநோய் உள்ள ஒருவருக்கு நோய் எதிர்ப்பு மருந்துடன் இந்த குறிப்பிட்ட நானோ துகளையும் இணைத்து கொடுத்தால், அவை நோய் தாக்கப்பட்ட செல்களை மிக விரைவாக கண்டறியும். இதன் மூலம் மருத்துவ பரிசோதனைகள் எளிதாகலாம்.

Google_இந்த ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படும் கைப்பட்டை, மனிதர்களின் தோலுக்கு தகுந்தார் போல் வடிவமைக்கப்பட வேண்டும். ஏனெனில், ஒளி புகும் தன்மை தோலுக்கு தோல் வேறுபடும்.

அதன் காரணமாக, கூகுள் பலதரப்பட்ட மனித தோல்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக  கூகுள் உயிர் அறிவியல் பிரிவின் தலைவர் ஆண்ட்ரு கான்ரட்  கூறுகையில்,

“கூகுளின் சுகாதார திட்டங்கள் தொடர்பான ஆராய்ச்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பிட்ட இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டு மூன்று வருடங்களுக்கும் மேல் ஆகின்றன.”

“தாமதாமான மருத்துவ முறையை மாற்றுவதே கூகுளின் முக்கிய நோக்கமாகும். நானோ துகள்களைக் தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் கைப்பட்டை, மனித தோலில் ஒளியினை பாய்ச்சி, துகள்களுடன் தொடர்பு கொள்கிறது”.

“இதற்காக பலதரப்பட்ட தோல்களை நாங்கள் உருவாக்கி உள்ளோம். அதற்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன. எனினும், அவை முழுமை பெற நீண்ட நாட்களாகும்” என்று அவர் கூறியுள்ளார்.