Home நாடு ‘நம்பிக்கை’யின் அடிப்படையில் இந்தியச் சமுதாயத்துடன் அரசு இணைந்து செயல்படும்: நஜிப் தைப்பூச செய்தி

‘நம்பிக்கை’யின் அடிப்படையில் இந்தியச் சமுதாயத்துடன் அரசு இணைந்து செயல்படும்: நஜிப் தைப்பூச செய்தி

532
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 3 – இந்தியச் சமுதாயம் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க அரசாங்கம் ‘நம்பிக்கை’யின் அடிப்படையில் அச்சமுதாயத்துடன் இணைந்து செயல்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் உறுதியளித்துள்ளார்.

Najib Tun Razak Prime Ministerவெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் இந்தியச் சமுதாயத்துக்கு மலேசிய அரசு அனைத்துவித உதவிகளையும் செய்யும் என்றும் தைப்பூசத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.

“தங்களது வேண்டுதலை நிறைவேற்றவும், நன்றி செலுத்தவும் தைப்பூசத்தன்று நமது இந்துமத சகோதர, சகோதரிகள் கோவில்களில் பிரார்த்தனைகள் செய்கின்றனர். நமது மதங்கள் சார்ந்த பண்டிகைகளுக்கு பரஸ்பர மரியாதை செலுத்தும் விதமாக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று நமது ஒற்றுமையைப் புலப்படுத்துவோம். பல்வேறு நம்பிக்கைகளும் இனங்களும் கொண்ட இந்நாட்டில் நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற அடிப்படையில் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழும் நல் வாய்ப்பை பெற்றுள்ளோம். மலேசிய இந்துக்கள் தைப்பூசத்தை கொண்டாடும் இவ்வேளையில் நமது உயரிய பன்முக கலாச்சாரத்தின் சிறப்பு நம் அனைவருக்கும் மீண்டும் நினைவூட்டப்படுகிறது,” என பிரதமர் தனது முகநூல் (பேஸ்புக்) அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

துணைப் பிரதமரின் செய்தி

Muhyideen-Yassin-Sliderஇதற்கிடையே துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் (படம்) விடுத்துள்ள அறிக்கையில், இனங்களுக்கு இடையேயான  இன ஒற்றுமையையும் நாட்டுப்பற்றையும் வளர்ப்பதற்கான முயற்சியில் தைப்பூசத் திருநாளையொட்டி மலேசிய இந்துக்கள் மேலும் தீவிரமாக ஈடுபடுவர் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் சுபிட்சத்திற்கும் மலேசிய இந்துக்கள் தங்களின் பங்களிப்பை நல்குவர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.