Home நாடு சங்கப் பதிவிலாகா முடிவுக்கு முன்னரே அமைச்சர் சாஹிட் ஹமிடி தலையிடலாமா?

சங்கப் பதிவிலாகா முடிவுக்கு முன்னரே அமைச்சர் சாஹிட் ஹமிடி தலையிடலாமா?

556
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 3 – மஇகாவின் அனைத்து நிலைகளிலும் மறுதேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் அறிவித்திருப்பதை சங்கப் பதிவிலாகா வரவேற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி (படம்) தெரிவித்துள்ளார்.

மஇகாவின் சட்ட விதிமுறைகள் மற்றும் சங்கப் பதிவிலாகா சட்டத்திற்கு உட்பட்டு மறுதேர்தலை நடத்தலாம் என்றார் அவர்.

Ahmad-Zahid-Hamidiஇருப்பினும், இந்த விவகாரத்தில் இன்னும் சங்கப் பதிவிலாகா தனது முடிவை தெரிவிக்காமல் இருக்கும் நிலையில், மேல் முறையீடு மீதான முடிவு எடுக்க வேண்டிய அமைச்சரான சாஹிட் ஹமிடியே பகிரங்கமாக மறுதேர்தல் நடத்த ஒப்புக் கொள்வது போல் அறிவித்திருப்பது மஇகா மறு தேர்தல் விவகாரத்தில் மேலும் சட்டசிக்கலை உருவாக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் மாநில மஇகா கிளைத் தலைவர்களை சந்தித்த பழனிவேல், வரும் ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் வரையில் மஇகா கிளைகள் தொடங்கி மத்திய செயலவை வரை அனைத்து நிலைகளிலும் மறுதேர்தல் நடத்தப்படுவதற்கு பரிந்துரை செய்யப்படும் என அறிவித்தார்.

“மறுதேர்தல் குறித்த மஇகா தலைவரின் அறிவிப்பு மற்றும் மஇகாவின் தற்போதைய நிலை குறித்து சங்கப் பதிவதிகாரியுடன் ஆலோசனை நடத்தினேன். மஇகா தலைவரின் அறிவிப்பை அவர் வரவேற்றுள்ளார். பழனிவேலின் இந்த ஆலோசனையை மஇகாவில் உள்ள அனைத்து பிரிவினரும் ஏற்க வேண்டும். இதன் பின்னர் முறையான பிரச்சாரங்களை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெறுபவர்களை அங்கீகரிக்க வேண்டும். இதன் மூலம் மஇகா இனி ஒரே அணியாக செயல்படும் என நம்புகிறேன்,” என்றார் ஹமிடி.

g-palanivel_mic-300x198மஇகாவின் அனைத்து கிளைகளிலும் அக்கட்சியின் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நியாயமான முறையில் பிரச்சாரமும் தேர்தலும் நடைபெறும் எனத் தாம் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆனால், ஏற்கனவே பழனிவேல் விடுத்திருந்த அறிவிப்பின்படி, சங்கப் பதிவகத்தின் முடிவுக்கு எதிராக தான் உள்துறை அமைச்சருக்கு மேல் முறையீடு செய்திருப்பதாகவும், அந்த மேல்முறையீட்டு முடிவுக்காக தான் காத்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மஇகா விவகாரத்தில் இரண்டு தரப்புகள் இருக்கும் நிலையில் – கட்சியில் மறுதேர்தல் கோரி ஒரு தரப்பு புகார் கொடுத்துவிட்டு காத்திருக்கும் நிலையில் – நடுநிலையாக இருந்து  முடிவு சொல்ல வேண்டிய அமைச்சரே –

ஒருதலைப் பட்சமாக பழனிவேலுவின் அறிவிப்பை ஏற்றுக் கொள்வது போல் முன்கூட்டியே சாஹிட் அறிவிப்பு கொடுத்திருப்பது  எந்தவிதத்தில் நியாயம் என புகார்தாரர்கள் தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.