சென்னை பிப்ரவரி 4 – சமீபத்தில் ’நானும் ரவுடிதான்’ படத்தின் ஒரு காட்சியில் நயன்தாரா மதுபான கடையில் சென்று பீர் பாட்டில் வாங்குவது போன்று காட்சி உள்ளது.
இந்த காட்சி செல்பேசியில் எடுக்கப்பட்டு சமூக வலைகளில் பகிரப்பட்டது. இந்த காட்சியை படத்திலிருந்து நீக்கும்படி ஏற்கெனவே இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்தனர்.
தற்போது நயன்தாராவை கண்டித்து நேற்று வேலூர் டோல்கேட் அருகே இந்து மக்கள் கட்சியின் வேலூர் மாவட்ட இளைஞர் அணி சார்பில் அவரது உருவபொம்மையை எரித்து கோஷமிட்டுள்ளனர்.
இதில் வேலூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுதாகர், மாவட்ட செயலாளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அதற்குள் உருவ பொம்மையை எரித்தவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போல் பல படங்களில் பெண்கள் , மது அருந்துவது போலும், மது கடையில் வந்து கதாநாயகனுடன் பேசுவது போலவும் ஏற்கனவே பல படங்களில் காட்சிகள் வைக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது இதுவேறு புதிய பிரச்சனையா என கோலிவுட் வாசிகள் முணுமுணுக்கத் துவங்கியுள்ளனர்.