Home உலகம் ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ரூ.54 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – ஒபாமா அறிவிப்பு!

ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ரூ.54 ஆயிரம் கோடி ஒதுக்கீடு – ஒபாமா அறிவிப்பு!

557
0
SHARE
Ad

Obama3(C)வாஷிங்டன், பிப்ரவரி 4 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்க அமெரிக்க பட்ஜெட்டில், சுமார் ரூ.54 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தங்கள் வசம் கொண்டுவரும் வகையில் ஐஎஸ் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இரு நாடுகளின் பல்வேறு பகுதிகளை ஐஎஸ் தீவிரவாதிகள், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை தொடர்ந்தவண்ணம் உள்ளது. ராணுவத்துக்கு சவாலாக விளங்கி வரும் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஈராக், சிரியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் ஐஎஸ் தீவிரவாதிகள் கால்பதிக்க திட்டமிட்டு வருகின்றனர். தங்களுடைய அமைப்பில் இளைஞர்களை சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சிரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல், அந்நாட்டு ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா செயல்பட்டு வருகிறது.

அமெரிக்க கூட்டுப்படையினர் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில், சுமார் ரூ.54 ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா ஒதுக்கியுள்ளது.

அமெரிக்க பட்ஜெட்டில் இதற்கான நிதியை ஒதுக்கி உள்ளதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடுவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது போன்றவற்றுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை தீவிரவாத அமைப்பாக கருதும் அமெரிக்கா தலிபான்களை தீவிரவாதிகளாக கருத தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் தரும் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து கோடிக்கணக்கில் நிதி உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.