Home உலகம் இராணுவ அணிவகுப்பு – சீன அதிபரை அழைக்கிறது பாகிஸ்தான்!

இராணுவ அணிவகுப்பு – சீன அதிபரை அழைக்கிறது பாகிஸ்தான்!

625
0
SHARE
Ad

080315-3இஸ்லாமாபாத், பிப்ரவரி 5 – பாகிஸ்தானில் அடுத்த மாதம் 23-ம் தேதி முப்படை அணிவகுப்பு நடைபெற உள்ளது. அந்த அணி வகுப்பிற்கு தலைமையேற்க சீன அதிபர் ஜிங் பிங்கை அழைக்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியா கடந்த மாதம் 26-ம் தேதி, தனது 66-வது குடியரசு தின விழாவை கோலாகலமாக கொண்டாடியது. இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஒபாமா கலந்து கொண்டார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவர், இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது இதுவே முதல் முறை. இந்தியாவிற்கு ஒபாமாவின் வரவை பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சவுத்ரி முகமது சர்வார், “அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இந்தியா குடியரசு தினவிழாவில் கலந்து கொண்டதும், முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதும், பாகிஸ்தானுக்கு அரசியல் ரீதியிலான தோல்வியை ஏற்படுத்தி உள்ளது” என்று வெளிப்படையாக விமர்சித்தார்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் அடுத்த மாதம், 23-ம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. அந்த விழாவின் போது, நடத்தப்படும் முப்படை அணிவகுப்பிற்கு சீன அதிபர் ஜிங் பிங்கை தலைமை விருந்தினராக அழைக்க நவாஸ் ஷெரீப் அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும்,அந்நாட்டு அரசு வட்டாரங்கள் சூசகமாக தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு குளறுபடிகளால் சுமார் 6 ஆண்டு காலம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்த அணிவகுப்பை பாகிஸ்தான் மீண்டும் நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், பாகிஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களால், அந்நாட்டின் இந்த கோரிக்கையை ஜிங் பிங் ஏற்பாரா என்பது தெரியவில்லை.