Home கலை உலகம் வடிவேலு நடிக்கும் புதிய படம் ’எலி’!

வடிவேலு நடிக்கும் புதிய படம் ’எலி’!

733
0
SHARE
Ad

eliசென்னை, பிப்ரவரி 5 – நடிகர் வடிவேலு புதிதாக நடித்துவரும் படம் எலி. இப்படத்தை ‘தெனாலிராமன்’ இயக்குநர் யுவராஜே இயக்கிவருகிறார். சினிமாவை விட்டு விலகி இருந்த வடிவேலு மீண்டும் ‘தெனாலிராமன்’ படம் மூலம் நடிக்க துவங்கினார்.

மீண்டும் ஒரு வருட இடைவேளைக்கு பிறகு அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளார். சிட்டி சினி கிரியேஷன்ஸ், ஜி.சதிஷ் குமார், தயாரிப்பில் ’தெனாலிராமன்’ பட இயக்குநர் யுவராஜே இயக்க வரும் படம் ‘எலி’.

இதில் வடிவேலு துப்பறியும் நிபுணராக நடிக்கிறார். கதைக்களம் 1970-களில் நடப்பது போன்றும் தனியார் துப்பறியும் நிறுவனத்தின் மூலம் போலீஸ் அதிகாரிகளே கண்டறிய முடியாத ஒரு கும்பலை இவர் எலி போல் செயல் பட்டு கண்டுபிடிப்பது போல் கதையாம்.

#TamilSchoolmychoice

படத்திற்கு இசை வித்யா சாகர். இந்த படத்தை தொடர்ந்து நான்கு படங்களில் வடிவேலு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.