Home நாடு டிரான்ஸ் ஆசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

டிரான்ஸ் ஆசியா விமான விபத்து: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

499
0
SHARE
Ad

TransAsia Airways plane crashes into river, at least 8 killedதைபே, பிப்ரவரி 5 – தாய்வான் நாட்டின் டிரான்ஸ் ஆசியா விமானம் நேற்று தைபே ஆற்றில் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் பலி எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது. இன்னும் மரண எண்ணிக்கை உயரலாம் என்றும் அஞ்சப்படுகின்றது. காரணம் இன்னும் 12 பயணிகளை காணவில்லை என்று கூறப்படுகின்றது.

தைவான் நாட்டின் தலைநகர் தைபேவில் உள்ள சங்சான் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா ATR 72-600 ரக, நேற்று காலை 58 பேருடன் புறப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் கட்டிடங்களுக்கு நடுவில் தாறுமாறாகப் பறந்த விமானம், பாலம் ஒன்றில் மோதி ஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது.

இதில், 15 பயணிகள் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளனர். விமானியும், துணை விமானியும் இறந்துவிட்டனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice