Home கலை உலகம் தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்!

தலைவாசல் விஜய் மகள் தேசிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார்!

802
0
SHARE
Ad

Jayaveena,சென்னை, பிப்ரவரி 5 – நடிகரின் மகன் நடிகையாவதுதான்  தமிழ் சினிமாவின்  வரலாறு. ஆனால், இதே தமிழகத்தில் இருந்து ஒரு நடிகர் தனது மகளை நீச்சல் வீராங்கனையாக்கி, தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கமும் வெல்ல வைத்துள்ளார்.

தலைவாசல் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜயகுமார் என்பவர், பின்னர் நடிகர் தலைவாசல் விஜய் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார்.

இவரது 15 வயது மகள் ஜெயவீனாதான் கேரளாவில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டுப் போட்டியில் 50 மீட்டர் பிரேக்ஸ்டாக் நீச்சலில் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஜெயவீனா, நேற்று நடந்த இந்தப் போட்டியில் 50 மீட்டர் தொலைவை 34.43 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜெயவீனா இதுவரை 7 தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இவரது தங்க பதக்கம்,  தமிழக அணியை பதக்கப் பட்டியலில் 6-வது இடத்துக்கு முன்னேற்றி உள்ளது.

thalaivasal vijayதனது மகளின் வெற்றி குறித்து தலைவாசல் விஜய் கூறும்போது, ”தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே மகளுடன்தான் இருக்கிறேன். அவள் தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்காக இருந்தது. இதற்கான அனைத்து படபிடிப்புகளையும் கூட ரத்து செய்து விட்டேன்.

இதற்கு முன் கடந்த 2012 ஆம் ஆண்டு ராஞ்சியில் நடந்த தேசியப் போட்டியில் ஜெயவீனா ஒரு வெள்ளி ஐந்து வெண்கலப் பதக்கங்களை வென்றார். அப்போதே எனது மகள் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இப்போது அது நினைவாகியுள்ளது. இனி அடுத்த இலக்கு சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதே” என்றார்.