Home வாழ் நலம் ஆஸ்துமா, நீரிழிவு நோயை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை!

ஆஸ்துமா, நீரிழிவு நோயை குணமாக்கும் மணத்தக்காளிக் கீரை!

1047
0
SHARE
Ad

Solanum americanum,பிப்ரவரி 5 – மணத்தக்காளி கீரை வியர்வையையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கொழுப்பை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.

மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும்.

மணத்தக்காளி கீரை சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். மணத்தக்காளி இலையை வதக்கி வலியுடன் கூடிய வீக்கத்திற்கு இளஞ்சூட்டுடன் வைத்துக் கட்டி வர நன்மை பயக்கும்.

#TamilSchoolmychoice

மணத்தக்காளிக் கீரையை தினந்தோறும் பருப்புடன் கலந்து சமைத்து உண்டு வந்தால்  நெஞ்சில் கட்டியுள்ள சளி அகற்றி வாத ரோகங்களை நீக்கும்.

மணத்தக்காளி சுவையின்மையை நீக்கி பசியைத் தூண்டும் குணம் உண்டு. மணத்தக்காளிக் காய்களைப் பறித்து சுத்தம் செய்து, மோருடன் சிறிது உப்பு சேர்த்து வெயிலில் நன்கு உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வதே மணத்தக்காளி வற்றல்.

இதனை எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து சிறிது நெய் சேர்த்து உண்டு வந்தால் மலச்சிக்கல், வயிற்றில் கிருமியினால் உண்டாகும் தொந்தரவுகள் விடுபடும். ஆஸ்துமா, நீரிழிவு முதலிய நோய் உடையவர்கள், மெலிந்த உடலினை உடையவர்கள் அனைவருக்கும் இது சிறந்தது.

DSCN8455நீர்க்கோவை, நீர்ச்சுருக்கு முதலியவற்றிற்கு இதன் வற்றலை 135 கிராம் எடுத்து 700 மி.லி. வெந்நீரில் ஊறவைத்து ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். பின்னர் அதனை இறுத்து 35 மி.லி. அருந்தி வருவது நல்லது.

மணத்தக்காளி இலையிலிருந்து தயாரிக்கப்படும் தைலம் இருமல், இரைப்பு முதலிய நோய்களுக்கு சிறந்த நிவாரணியாகும். சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன்படுத்தலாம்.

மணத்தக்காளி இலையைக் கீரை போல் கடைந்து உண்டு வர, அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு.

மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.

மணத்தக்காளி கீரை உடன் பாதியளவு பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு வைத்து அல்லது கடைந்து சாதத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

Solanum_americanum_(4898754585)மணத்தக்காளிக் கீரையுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு, வேகவைத்து அந்த தண்ணீரை குடித்து விட வேண்டும். பிறகு கீரையை சமைத்து ஐந்து நாட்கள் சாப்பிட வயிற்றுப் புண் ஆறிவிடும்.

மணத்தக்காளி இலைச்சாறு, வல்லாரை இலைச்சாறு, தேன் மூன்றிலும் ஒரு தேக்கரண்டி எடுத்து தினசரி காலை, பகல் மாலையாக மூன்று வேளையும் காமாலை நோய் தீரும் வரை கொடுக்க வேண்டும்.

வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் ஆற்றல் படைத்தது மணத்தக்காளிக்கீரை. கையளவு கீரையை எடுத்து வாயில் போட்டு மெல்ல வாய்ப்புண்கள், நாக்குப் புண்கள் ஆறும். உடலுறுப்புகளில் வேறெங்கும் புண் இருந்தால் அவையும் குணமாகும்.