Home கலை உலகம் ரஜினி புகாரை அடுத்து ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை!

ரஜினி புகாரை அடுத்து ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்துக்கு உயர்நீதிமன்றம் தடை!

581
0
SHARE
Ad

rajinikanth759சென்னை, பிப்ரவரி 7 – ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அப்படத்திற்கு நிரந்தர தடை விதித்தது.

மும்பை வர்ஷா நிறுவனம் ‘மெயின் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை தயாரித்துள்ளது. படத்திற்கு எந்த அனுமதியும் பெறாமல் தனது பெயர் பயன்படுத்தியுள்ளதாக ரஜினி புகார் அளித்தார்.

Poster_Two_With_Logos_SSமேலும் தனது பெயரை களங்கப்படுத்தும் வகையில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா படத்துக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டார்.