Home தொழில் நுட்பம் இந்தோனேசியாவில் அண்டிரொய்டு ஒன்னை களமிறக்கும் கூகுள்!   

இந்தோனேசியாவில் அண்டிரொய்டு ஒன்னை களமிறக்கும் கூகுள்!   

487
0
SHARE
Ad

Android One 1ஜாகர்த்தா, பிப்ரவரி 7 – உள்நாட்டு நிறுவனங்களின் திறன்பேசிகளில், அனைத்துலக அங்கீகாரம் பெற்ற அண்டிரொய்டு இயங்குதளம். உயர் ரக சாம்சுங் திறன்பேசிகளில் அண்டிரொய்டின் செயலிகள் என்னென்ன இருக்குமோ அதே அளவிலான செயலிகள், மலிவு விலை திறன்பேசிகளிலும்.

இதுவே கூகுள் நிறுவனத்தின் ‘அண்டிரொய்டு ஒன்’ (Android One) திட்டம். அண்டிரொய்டு பிரிவிற்கு மட்டும் சுந்தர் பிச்சை தலைமை வகித்த போது அவரது யோசனையின் பேரில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டம்,

இந்தியாவைத் தாண்டி இலங்கை, நேபால், வங்கதேசம் என பரவத் தொடங்கியது. இந்நிலையில், தற்போது இந்த திட்டத்தை இந்தோனேசியாவிலும் செயல்படுத்த கூகுள் முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்தோனேசியாவில் செயல்பட்டு வரும் ‘எவர்காஸ்’ (Evercoss), ‘மிட்டோ’ (Mito) மற்றும் ‘நெக்சியன்’ (Nexian) நிறுவனங்களுடன் இணைந்து,

அண்டிரொய்டு ஒன் திட்டத்தை அங்கு செயல்படுத்த இருக்கின்றோம். இந்தியாவில் கிடைத்த வெற்றி, இந்தோனேசியாவிலும் சாத்தியமாகும் என நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

android-one-featuresமேலும், அண்டிரொய்டு ஒன் திட்டத்துடன் முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் கூகுள் விரைவில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, கூகுள் சமீபத்தில் அண்டிரொய்டின் 5.1 பதிப்பான ‘லாலிபாப்’ (Lollipop)-ஐ வெளியிட்டது. அதனை அண்டிரொய்டு ஒன் திட்டத்துடுடன் இணைப்பதே அந்த முக்கிய அறிவிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இத்துடன், கூகுள் நிறுவனத்தின் கிளைப் பிரிவான யூ-டியூப் மூலம், பல்வேறு காணொளி வசதிகளையும் அண்டிரொய்டு ஒன் திட்டத்தில் செயல்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் ஏற்படுத்திய அண்டிரொய்டு ஒன் புரட்சியை, கூகுள் இதுவரை மூன்று நாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தி உள்ளது.

தற்போது, இந்தோனேசியாவில் அதனை களமிறக்க முடிவு செய்துள்ள கூகுள், விரைவில் மலேசியாவில் அதனை செயல்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.