Home இந்தியா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தந்தையானார்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி தந்தையானார்!

950
0
SHARE
Ad

Dhoni (1)குர்கான், பிப்ரவரி 7 – இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் 33 வயதான மகேந்திரசிங் டோனி தந்தையாகி இருக்கிறார். டோனிக்கும், அவரது சிறுவயது தோழி சாக்ஷிக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்தது.

அதன் பிறகு எங்கு கிரிக்கெட் நடந்தாலும் கணவரின் ஆட்டத்தை காண சாக்ஷி தவறாமல் வந்து உற்சாகப்படுத்துவார்.  இந்த நிலையில் சாக்ஷி கர்ப்பமானார்.

இதனால் டோனியுடன் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதை தவிர்த்து விட்டார். இந்நிலையில் டெல்லி அருகே உள்ள குர்கானில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாக்ஷிக்கு நேற்று மாலை பெண் குழந்தை பிறந்தது.

#TamilSchoolmychoice

dhoniகுழந்தை நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். டோனி-சாக்ஷி தம்பதிக்கு இது முதல் குழந்தையாகும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக டோனி இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.

தந்தை ஆன தகவல் அறிந்ததும் பூரித்து போன அவர் சக வீரர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் ஒரு வார காலமே உள்ளதால் இப்போதைக்கு அவர் தனது மகளை நேரில் பார்க்க முடியாத சூழலில் இருக்கிறார் டோனி.