Home உலகம் பாகிஸ்தானை தாக்க மோடி தயங்கமாட்டார் – முன்னாள் அமெரிக்க தூதர் பகீர்!

பாகிஸ்தானை தாக்க மோடி தயங்கமாட்டார் – முன்னாள் அமெரிக்க தூதர் பகீர்!

541
0
SHARE
Ad

modi-robert-blackwillவாஷிங்டன், பிப்ரவரி 7 – இந்தியாவிற்காக மோடி பாகிஸ்தான் மீது இராணுவத் தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டார் என இந்தியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் தெரிவித்துள்ள கருத்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாஷிங்டன்னில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ராபர்ட் பிளாக் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:- “15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றது.

“அதன்பிறகு எப்போதெல்லாம் இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், பாகிஸ்தான் மீது இராணுவ பலத்தை பிரயோகிக்க இந்திய பிரதமர்கள் அதிகம் யோசித்தது உண்டு”.

#TamilSchoolmychoice

“ஆனால் செயல்படுத்தாமல் பின் வாங்கிவிடுவர். தற்போது இந்தியாவின் நிலைப்பாடு முற்றிலும் மாறியுள்ளது. இப்போதைய பிரதமர் அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் பின்வாங்க மாட்டார் என்றே தோன்றுகிறது”.

“இந்தியாவில் ஏதாவது ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் நடந்து, அதில் பாகிஸ்தானுக்கு தொடர்புள்ளது கண்டுபிடிக்கப்பட்டால், நரேந்திரமோடியின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருக்கும்.”

“தனது இராணுவத்தை பயன்டுத்தி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது. மோடியின் குணநலன் மற்றும் இந்தியாவில் மாறியுள்ள பார்வை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால், முந்தைய பிரதமர்களைவிட இந்த விவகாரத்தில் அவர் தீவிரமாக இருப்பார் என்றே தெரிகிறது”.

“இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே அணு ஆயுத பலம் கொண்டவை என்பதால், இரு நாடுகளும் மோதுவது ஆபத்தில் முடியும். இதை பாகிஸ்தான் புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே கருத்தினை ப்ரூக்கிங்ஸ் அமைப்பின் வெளியுறவு கொள்கைகளுக்கான மூத்த ஆய்வாளர் ஸ்டீபன் சோகெனும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.