Home நாடு மஇகா விவகாரம்: பிப்ரவரி 9-ம் தேதி செய்தியாளர்களை சந்திக்கிறார் சாஹிட்!

மஇகா விவகாரம்: பிப்ரவரி 9-ம் தேதி செய்தியாளர்களை சந்திக்கிறார் சாஹிட்!

544
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர், பிப்ரவரி 7 – மஇகா பிரச்சனைகள் தொடர்பாக விளக்கமளிக்க வரும் திங்கட்கிழமை உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி, பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளார்.

புத்ரா ஜெயாவிலுள்ள மேரியாட் தங்கும்விடுதியில், பிப்ரவரி 9-ம் தேதி திங்கட்கிழமை, மதியம் 1.30 மணியளவில் இச்சந்திப்பு நடைபெறவுள்ளது.

இச்சந்திப்பில், மஇகா விவகாரங்களில் உள்துறை அமைச்சின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.