Home இந்தியா டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி – கருத்துக் கணிப்புகள்

டில்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி – கருத்துக் கணிப்புகள்

566
0
SHARE
Ad

Arvind-Kejriwalபுதுடில்லி, பிப்ரவரி 7 – வாக்களிப்புக்கு பின்னர் வாக்காளர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி புதுடில்லி மாநில சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் அரவிந்த் கெஜ்ரிவால் (படம்) தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியே பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்ற தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

புதுடில்லியைப் பொறுத்தவரை நன்கு படித்த, அரசியல் அறிந்த வாக்காளர்களைக் கொண்ட நாட்டின் தலைநகர் என்பதால், தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு சரியான போட்டியாக ஆம் ஆத்மி கட்சிதான் திகழும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டிருப்பதாக கருத்துக் கணிப்புகள் நிலவுகின்றன.

இருப்பினும், பாஜகவும் கணிசமான இடங்களைப் பெற்று இறுதி நேரத்தில் தொங்கு சட்டமன்றம் அமையலாம் என்ற கருத்துக் கணிப்பும் நிலவுகின்றது.

#TamilSchoolmychoice