Home நாடு மஇகாவின் குடுமி பிரதமர் பிடியிலா? பழனி-சுப்ரா மடியிலா? – தமிழ்மணி விமர்சனம்

மஇகாவின் குடுமி பிரதமர் பிடியிலா? பழனி-சுப்ரா மடியிலா? – தமிழ்மணி விமர்சனம்

617
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி  8 – “மஇகா யார் பிடியில் யார் மடியில் இப்போது இருக்கிறது என்ற கேள்வி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு சரியான பதிலை சொல்லப் போகிறவர்கள்யார்?  6 லட்சம் மஇகா உறுப்பினர்களா?அல்லது 4 ஆயிரம் மஇகா கிளைத்தலைவர்களா? அல்லது 149 தொகுதித் தலைவர்களா? என்ற கேள்விக்குறி பரவலாக எழுப்பப்பட்டு வருகிறது” என மூத்த எழுத்தாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத் தலைவருமான பெரு.அ.தமிழ்மணி குறிப்பிட்டுள்ளார்.Tamil Maniமலேசிய அரசியல் அரங்கில் நீண்ட காலமாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதிவரும் தமிழ்மணி, பல சமூகப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். நெடுங்காலமாக சமூக இயக்கங்களோடு தொடர்பு கொண்டவர். நடப்பு மஇகா விவகாரம் குறித்து அவர் எழுதியுள்ள விமர்சனக் கட்டுரையில் பின்வருமாறு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இத்தகை சூழ்நிலையில்தான், மஇகா விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு பிரச்சினைகளை களைவார் என்ற எதிர்பார்ப்புக்கிடையில் மஇகா துணைத்தலைவரும். சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ  டாக்டர் ச.சுப்பிரமணியமும், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ  ஜி.பழனிவேலுவும் பிரதமரைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.”

“இப்படிப்பட்ட சூழ்நிலையில் இப்போது மஇகா யார் கையில் உள்ளது?இத்தகைய சிக்கலில் கட்சியை மாட்டிவிட்டவர் யார்? பாரிசான் அணியில் உறுப்பு கட்சியாக இருக்கும் மஇகா முக்கியமான பிரச்சினைகளில் பிரதமரை நாடுவது பாரிசான் தலைமையை பின்பற்றி தொடர்வது ஆரோக்கியமானது என்றாலும் உள்கட்சி தகராற்றை பிரதமர் தலையிட்டு தீர்த்து வைப்பது என்பது இன்றைய மஇகா தலைவரான பழனிக்கு தலைக்குனிவே!”

#TamilSchoolmychoice

“தனது குடும்ப பிரச்சனைக்கு சுயமாக தீர்வு காண முடியாத ஒரு தலைவராக இருப்பது அவருக்கு பின்னடைவே!”

Palanivel-and-MIC“அதற்கு அவர் துணிச்சலான விவேகமான தீர்க்கமான முன்னெடுப்புக்கு இதுவரை தன்னைத் தயார்படுத்தி கொள்ளாததே யாகும். அதாவது துணிச்சலான முடிவு என்றால் மஇகா தேசியத் தலைவர் தேர்தலை அவர் எதிர்நோக்கியிருக்க வேண்டும் அப்படி அவர் எதிர் நோக்காமல் பிரதமர் உதவியை நாடி சமரசம் செய்து கொண்டு தேசியத் தலைவரான காரணத்தால்தான் இந்த பிரச்சனைகள் தொடர்கின்றன”

“அடுத்து மலாக்காவில் தேர்தலை முறைகேடாக நடத்தியதால் அவரின் விவேகமற்ற தன்மை வெளிப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் தேர்தல் முறைகேடு குறித்து புகார்கள் கொடுத்தும் அதை கட்சிக்குள் தீர்வு காணாமல் சங்கங்களின் பதிவு இலாகா வரை புகார் செல்ல பழனிவேல் இடமளித்ததும், இந்த விவகாரம் இன்று இப்படி பெரிதாக வளர்ந்திருப்பதற்கான காரணமாகும்”.

“இப்படி மூன்று கட்டங்களில் அவர் மேற்கொண்ட தவறுகள் இன்றைய குழப்பங்களுக்கு பெருங் காரணமாகும்.இவற்றிக்கு இடையிலும் பந்து தனது கையில் இருந்தும் அதை லாவகமாக பயன்படுத்தத்  தெரியாமல் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் சுப்பிரமணியத்திற்கு எதிராகப் பயன்படுத்த நினைத்தது இன்னொரு சறுக்கலுக்கு வழி அமைத்துவிட்டது.”

பிரதமர் தலையீட்டுக்கு வழிவகுத்தது பழனிவேல்தான்

KL16_180308_SUBRAMANIAM“இதனால் 2013-ல் பிரதமருடன்செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறும் குற்றத்திற்கு இப்போது அவர் ஆளாகியுள்ளரர் .அதன் விளைவாகவே பிரதமர் தலையிடுகின்ற சூழ்நிலைக்கு பழனி தள்ளப்பட்டுள்ளார், மஇகாவும் தள்ளப்பட்டுள்ளது.”

“பிரதமருடன் மஇகாவின் உயர்மட்டத்த தலைவர்கள் பேசியது என்னவென்றால், 2016 மார்ச்சில் பழனி பதவி விலக வேண்டும் – சுப்ரா அடுத்த தலைவராகப் பதவி ஏற்க வேண்டும்,  அடுத்த பொதுத்தேர்தலை சுப்ரா தலைமையில் கட்சி சந்திப்பது என்பதாகும்.”

“தற்போதைய சூழ்நிலையில் பழனி அதை மீறக்கக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாலேயே  பிரதமர் இப்போது மஇகா-வின் குடுமியை தனது பிடியில் எடுத்துக்கொண்டார்.”

“அதன் விளைவாகவே தனது தலையீடு குறித்து பிரதமர் அறிவித்துள்ளார்.இதனால் இப்பொழுது சரியான பந்து வீச்சாளராக சுப்ரா களத்தில் இறங்கி உள்ளார். அதனுடைய முன்னோட்டமே அண்மையில் அவர் தொகுதி மஇகா தலைவர்களை சந்தித்ததாகும்.அதன் வழி அவர் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.”

“எது எப்படி இருந்தாலும் மஇகாவின் குடுமி பிரதமர் கையில் இருப்பது மஇகாவுக்கோ சமூகத்திற்கோ நல்லதல்ல!”

 “அதை இனியாவது உணர்ந்து தற்போதைய சிக்கலில் மாற்றத்தை -ஏற்றத்தை மஇகா கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.”

-பெரு.அ.தமிழ்மணி 

(பின்குறிப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது. கட்டுரையாளரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்)

wrrcentre@gmail.com