Home நாடு டாக்டர் சுப்ரா மகள் திவ்யதர்ஷனி – ரகுராஜ் வசந்தன் திருமண விருந்து படக் காட்சிகள்

டாக்டர் சுப்ரா மகள் திவ்யதர்ஷனி – ரகுராஜ் வசந்தன் திருமண விருந்து படக் காட்சிகள்

746
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 7 – மஇகா தேசியத் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தின் புதல்வி டாக்டர் திவ்யதர்ஷனிக்கும், டாக்டர் ரகுராஜ் வசந்தனுக்கும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தை முன்னிட்டு இன்று நண்பகல் விருந்து வரவேற்பு கோலாகலமாக நடைபெற்றது.

Dr Subra daughter wedding bride and bride groom

மணமகள் டாக்டர் ரகுராஜ் வசந்தனும், மணமகள் டாக்டர் திவ்ய தர்ஷனியும்

#TamilSchoolmychoice

பிரம்மாண்டமான செர்டாங் விவசாய கண்காட்சி மையத்தில் நடைபெற்ற இந்த விருந்து வைபவத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் பேர் கலந்து சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மலாக்கா மாநில ஆளுநர் துன் காலில் யாக்கோப், பிரதமர் நஜிப் துன் ரசாக், துணைப் பிரதமர் மொய்தீன் யாசின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Melaka Governor and PM at Dr Subra daughter wedding

திருமண விருந்துக்கு வருகை தரும் மலாக்கா மாநில ஆளுநர் துன் காலில் யாக்கோப், பிரதமர் நஜிப்…

இந்த விருந்து வைபவத்தில் அமைச்சர்கள் பலரும், மஇகா தலைவர்களும், நண்பர்களும், உறவினர்களுமாக திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

PM arriving Dr Subra daughter wedding

வருகை தரும் பிரதமரை வரவேற்கும் டாக்டர் சுப்ரா..

DPM at Dr Subra daughter wedding

துணைப் பிரதமர் மொய்தீன் யாசினை வரவேற்கும் டாக்டர் சுப்ரா அவரது துணைவியார் டாக்டர் உமாராணி சுப்ரமணியம்

Samy Vellu at Dr Subra daughter wedding

திருமண விருந்தில் தெற்காசிய நாடுகளுக்கான தூதரும் முன்னாள்  மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு….

Balakrishnan at Dr Subra daughter wedding

ஜோகூர் மாநிலத் தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன், பத்து தொகுதி தலைவரான ராமலிங்கம் ஆகியோருடன் மஇகா தலைவர்கள்….

Mohana Muniandy Sharizat at Dr Subra daughter wedding

வருகை தந்த அம்னோ மகளிர் தலைவி டத்தோஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலிலுடன் மஇகா மகளிர் தலைவி மோகனா முனியாண்டி (இடது கோடி) ஸ்ரீமுருகன் கல்வி மையத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ தம்பிராஜா ஆகியோர்..

PM and Melaka Governor at Dr Subra daughter wedding

பிரதான மேடையில் டாக்டர் சுப்ரா, பிரதமர் நஜிப், ஆளுநர் துன் காலில் யாக்கோப்…

T.Mohan and MIC leaders at Dr Subra daughter wedding

முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனுடன் ஜோகூர் மாநில மஇகா தலைவர்கள் சிலர்..

Saravanan at Dr Subra wedding

வரவேற்பு விருந்தில் கலந்து கொண்ட இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன், மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சி.சிவராஜ்

Dr Divya Darshani wedding photo

திருமண விருந்தின் சிறப்பு அங்கமாக கேக் வெட்டும் மணமகன் ரகுராஜ் வசந்தன் மணமகள் திவ்ய தர்ஷனி சுப்ரமணியம்