Home வாழ் நலம் புற்றுநோய் அணுக்களை அழிக்கும் பாகற்காய்!

புற்றுநோய் அணுக்களை அழிக்கும் பாகற்காய்!

944
0
SHARE
Ad

Bitter_Gourdபிப்ரவரி 9 – கசப்புச் சுவையுள்ள பாகற்காய் பல நல்ல பலன்களைக் கொண்டிருக்கிறது. எனவே முகத்தைச் சுளிக்காமல் பாகற்காயை சமைத்துச் சாப்பிட்டாலோ அல்லது சாறாகத் தயாரித்துக் குடித்தாலோ கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாகற்காயை உணவில் சேர்த்துவந்தால் அல்லது பாகற்காய் சாறு குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.

இதில் உள்ள மோர்மோர்சிடின் மற்றும் சரடின் எனப்படும் இரண்டு அமிலப் பொருட்கள், தசைகளுக்கு ரத்தம் மூலம் சர்க்கரையைக் கொண்டு செல்லும் முக்கிய வேலையைச் செய்கின்றன.

#TamilSchoolmychoice

அதுமட்டுமல்லாது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகின்றன. பொதுவாகவே, சரியான வேளையில் சரியான அளவில் உணவு உண்ணுவது மிகவும் முக்கியம்.

Bitter Gourd jusceசரியாக உணவு உண்ணாத பட்சத்தில், பலவிதமான நோய்கள் தொற்றிக் கொள்ளும். ஆனால் தொடர்ந்து நமது உணவில் பாகற்காயைப் பயன்படுத்தி வந்தால், செரிமான அமிலம் சுரப்பது மேம்படும் எனவே பசியும் அதிகரிக்கும்.

இன்று புற்றுநோய் பலவித ரூபங்களில் மனிதர்களைப் பயமுறுத்தி வருகிறது. ஆனால் கணையப் புற்றுநோய் அணுக்களை அழிப்பதில் பாகற்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இதிலுள்ள புற்றுநோய் எதிர்ப்புப் பொருட்கள், கணையப் புற்றுநோய் அணுக்கள் செயல்படுத்துவதைத் தடுக்கும். எனவே அணுக்களுக்கு வரவேண்டிய ஆற்றல் வராமல் போவதால் அவை அழிந்துவிடும்.

Bitter Gourdதினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு கப் பாகற்காய் சாறு உடன் ஒரு தேக்கரடி எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் புற்றுநோய் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.

பாகற்காயில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ உள்ளதால், கண் தொடர்பான தொந்தரவுகளை நீக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்களும் கண்களுக்கு நன்மை பயக்கும்.

இன்றைய சூழலில் நாம் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறி, பாகற்காய். அதை தினமும் சாப்பிட்டால் நமக்கு நன்மையே!