Home நாடு மலேசியாவில் கைதான சிரியா தீவிரவாத தலைவர் நாடு கடத்தப்பட்டார்!

மலேசியாவில் கைதான சிரியா தீவிரவாத தலைவர் நாடு கடத்தப்பட்டார்!

525
0
SHARE
Ad

handcuffsகோலாலம்பூர், பிப்ரவரி 9 – சிரியா மற்றும் ஈராக்கில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டார்.

சுமார் 45 வயது மதிக்கத்தக்க அந்நபர் கடந்த ஜனவரி 19ஆம் தேதி மலேசியா வருவதற்கு முன்பு தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றது தெரிய வந்துள்ளது.

ஜனவரி 31ஆம் தேதி மாலை புக்கிட் பிந்தாங்கில் உள்ள ஒரு தங்குவிடுதியில் அச்சந்தேக நபர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கைதான நபர் கடந்த 2012 முதல் சிரியாவில் உள்ள தீவிரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரமாக தேடப்படும் குற்றவாளிகளில் இவரும் ஒருவர்.

குடிநுழைவு சட்டத்தின் கீழ் போலி கடப்பிதழ் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறப்பு நடவடிக்கையின் மூலம் அவர் வெள்ளிக்கிழமை அன்று தமது சொந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

“அவர் சூடானில் அடைக்கலம் புகும் திட்டத்தில் இருந்ததாக கருதுகிறோம். ஏனெனில் கைதாவதற்கு முன்பு சூடான் தூதரகத்திலிருந்து விசா பெற அவர் முயற்சித்துள்ளார்,” என்றார் காலிட் அபுபக்கர்.

தீவிரவாத செயல்களில் ஈடுபடும் எவரும் மலேசியாவை தற்காலிக வழித்தடமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், நாடு கடத்தப்பட்ட நபருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை என்றார்.

நாடு கடத்தப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனும் விவரத்தை தற்போது வெளியிட இயலாது என்றும் காலிட் அபுபாக்கர் கூறினார்.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் பல்வேறு வெளிநாட்டுப் போராளிகள் மலேசியா வழி சிரியா உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் அதிகம் அரங்கேறும் நாடுகளுக்குச் செல்வது உறுதியாகி உள்ளது.