Home உலகம் எகிப்து காற்பந்தாட்ட போட்டியில் வன்முறை – 22 பேர் பலி!

எகிப்து காற்பந்தாட்ட போட்டியில் வன்முறை – 22 பேர் பலி!

537
0
SHARE
Ad

Zamalek fans clash with Egyptian policeகெய்ரோ, பிப்ரவரி 9 – எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட வன்முறையில் 22 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

கெய்ரோவில் உள்ள ஏர் டிபன்ஸ் காற்பந்தாட்ட மைதானத்தில் நேற்று இரவு நடந்த காற்பந்து போட்டியில் ‘எகிப்து பிரீமியர் லீக் கிளப் ஜமாலிக்’ அணியுடன் ‘ஈ.என்.பி.பி.ஐ.’ அணி மோதியது.

போட்டி நடந்து கொண்டிருந்த போது ‘ஜமாலிக்’ அணியின் ஆதரவாளர்கள் அனுமதிச் சீட்டு இல்லாமல் காற்பந்தாட்ட மைதானத்திற்குள் நுழைய முயற்சித்தனர். இதனால் பாதுகாப்பு படையினருக்கும் ஜமாலிக் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த மோதலின் போது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை உபயோகித்தனர். இந்த கலவரத்தில் 22 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹோஸாம் அப்தெல் கபார் தெரிவித்தார்.

egypt_650_020915091110படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். கலவரத்தை அடுத்து காற்பந்து போட்டித்தொடர் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட ஜமாலிக் அணி ஆதரவாளர்கள் 17 பேரை பாதுகாப்பு படையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.