Home உலகம் அங்கோர்வாட் கோவிலில் நிர்வாணப் படம்: சகோதரிகள் இருவர் கைது

அங்கோர்வாட் கோவிலில் நிர்வாணப் படம்: சகோதரிகள் இருவர் கைது

958
0
SHARE
Ad

Untitled 2(441)நோம்பென், பிப்ரவரி 9 – கம்போடியாவின் உலகப் பிரசித்தி பெற்ற அங்கோர்வாட் கோவில் வளாகத்தில் நிர்வாண புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

லின்ட்சே ஆடம்ஸ் (22 வயது) மற்றும் அவரது 20 வயது சகோதரி லெஸ்லி இருவரும் உலகப் பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்த தகாத செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து கோவில் வளாக பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ள அப்சரா என்ற நிறுவனம், இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

“இரு சுற்றுலா பயணிகளும் நிர்வாணப் படங்களை கோவில் வளாகத்தில் வைத்து எடுத்தது தாங்கள் செய்த தவறென்பதை ஒப்புக் கொண்டனர்,” என்று அப்சரா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

“இருவருக்கும் அங்கோர்வாட் ஒரு புனிதத்தலம் என்பது தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களின் இச்செயலால் கோவிலின் புனிதத்தன்மைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது,” என அப்சரா செய்தித் தொடர்பாளர் சாவ்சுன் கெர்யா தெரிவித்தார்.

இருவரும் தற்போது கம்போடிய காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“அந்த இரு இளம்பெண்களும் தங்களது கால்சட்டையை முட்டி வரை கீழிறக்கி தங்களது பின்புறங்களை படமெடுத்துக் கொண்டனர். இதற்காக எந்தச் சட்டப் பிரிவின் கீழ் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவில்லை,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.