Home நாடு ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறை உறுதிசெய்யப்பட்டது!

ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வாருக்கு 5 ஆண்டுகள் சிறை உறுதிசெய்யப்பட்டது!

475
0
SHARE
Ad

Anwar ibrahim

புத்ராஜெயா, பிப்ரவரி 10 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின் ஓரினப்புணர்ச்சி வழக்கு (II) -ல் மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான கூட்டரசு நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டது.

அதில், சைபுல் ஓரினப்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் விஞ்ஞானப்பூர்வமாகவும், சாட்சிகளின் படியும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி ஆரிஃபின் சகாரியா தீர்ப்பை வாசித்தார்.

#TamilSchoolmychoice

அன்வார் தரப்பில் இருந்து கோரப்பட்ட குறுக்கு முறையீட்டையும் ஆரிஃபின் நிராகரித்தார்.

இறுதியாக, அன்வார் மீதான குற்றம் விசாரணையில் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 5 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதிப்படுத்துவதாகவும் தீர்ப்பு வழங்கினார்.

தீர்ப்பைப் கேட்டவுடன் நீதிமன்றத்தில் இருந்த அன்வாரின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.