Home இந்தியா டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

507
0
SHARE
Ad

electionn2புதுடெல்லி, பிப்ரவரி 10 – டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 70 தொகுதிகளுக்கு கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி 14 மையங்களில் நடைபெறுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 10 மணி முதலே முன்னணி நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

maha_polls_2155418fமுடிவுகள் 1 மணிக்கு மேல் தெரியவரும். 66 பெண்கள் உட்பட மொத்தம் 673 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் கருத்துக்கணிப்புளை தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும் என பாரதிய ஜனதா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.