Home நாடு தொடர்ந்து பிரார்த்திக்கிறேன் – நீதிமன்ற வளாகத்தில் அன்வார்

தொடர்ந்து பிரார்த்திக்கிறேன் – நீதிமன்ற வளாகத்தில் அன்வார்

424
0
SHARE
Ad

Anwar Azizaபுத்ராஜெயா, பிப்ரவரி 10 – தன் மீதான வழக்கின் தீர்ப்பு சாதகமாக அமைய வேண்டி தொடர்ந்து பிரார்த்தனை செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இன்று காலை நீதிமன்றம் வந்த அவர், அங்கிருந்த செய்தியாளர்களிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமையும் எனக் கருதுகிறீர்கள்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சிரித்துக் கொண்டே, “உங்களைப் போலவே நானும் தீர்ப்பை அறிய ஆர்வமாக உள்ளேன். நான் தொடர்ந்த பிரார்த்திக்கிறேன்,” என்றார் அன்வார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, இன்று வழங்கப்பட உள்ள தீர்ப்பானது, உண்மையான ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என வான் அசிசா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியார்களிடம் பேசிய அவர், அன்வார் அப்பாவி என்பதால் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.

“தீர்ப்பு வழங்க உள்ள நீதிபதிகள் மக்களுக்கு மட்டுமல்ல, தங்களுடைய மனசாட்சிக்கும் கடவுளுக்கும் கூட பதில் சொல்ல வேண்டும். நீதித்துறை குறித்து நான் கேள்வி எழுப்ப எந்த காரணமும் இருக்கக் கூடாது என விரும்புகிறேன்,” என்றார் வான் அசிசா.

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று காலை (இன்னும் சற்று நேரத்தில்) அன்வார் மீதான வழக்கில் தீர்ப்பை வழங்க உள்ளது.