Home தொழில் நுட்பம் கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியால் பெண்ணுக்கு சுகப்பிரசவம்!

கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியால் பெண்ணுக்கு சுகப்பிரசவம்!

533
0
SHARE
Ad

google-translateடப்ளின், பிப்ரவரி 12 – ‘கூகுள் ட்ரான்ஸ்லேட்டர்’ (Google Translator)-ன் ஆகச் சிறந்த பலனை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அயர்லாந்தில், காங்கோ நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அனுபவித்துள்ளார். காங்கோ மொழியான ஸ்வாஹிலி மட்டும் பேசத் தெரிந்த அப்பெண்ணிற்கு, கூகுள் ட்ரான்ஸ்லேடர் உதவியுடன் செவிலியர்கள் இருவர் பிரசவம் பார்த்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய  கூகுள் ட்ரான்ஸ்லேட்டர், இதுவரை பலருக்கு பல்வேறு அலுவல்ரீதியிலான பணிகளுக்கு பெரிதும் உதவி செய்துள்ளது. ஆனால், மேற்கூறிய சம்பவம் சற்றே சுவாரசியமான ஒன்று.

அயர்லாந்தில் ஸ்வாஹிலி மொழி மட்டும் பேசத் தெரிந்த ஒரு பெண்ணிற்கு திடீர் என பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவர் உடனடி மருத்துவத்திற்காக கார்க் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அவசரம் அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

#TamilSchoolmychoice

அவருடன் ஜெரி மெக்கன் மற்றும் ஷேன் முல்ஹே என்ற இரண்டு செவிலியர்களும் பயணம் செய்தனர். சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது அப்பெண்ணிற்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

உடனடியாக பிரசவம் பார்த்தாக வேண்டிய சூழலில் அப்பெண் பேசும் ஸ்வாகிலி மொழி செவிலியர்களுக்குப் புரியவில்லை. சாமர்த்தியமாக சிந்தித்த செவிலியர்கள் தங்கள் திறன்பேசியில் உள்ள கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன் ஸ்வாகிலி மொழியை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்து அப்பெண்ணுடன் பேசி பிரசவம் பார்த்தனர்.  அவர்களின் சாமர்த்தியத்தால், அப்பெண்ணிற்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது பற்றி ஜெரி மெக்கன்  கூறுகையில்,”சாலையின் நடுவே, கூகுள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன் நாங்கள் பார்த்த இந்த பிரசவம் என்றும் மறக்க முடியாத ஒன்று” என்று கூறியுள்ளார்.