Home தொழில் நுட்பம் ‘ஆப்பிள் பே’ வசதியை மேம்படுத்த கைரேகை சென்சார்கள் – ஆப்பிள் திட்டம்!

‘ஆப்பிள் பே’ வசதியை மேம்படுத்த கைரேகை சென்சார்கள் – ஆப்பிள் திட்டம்!

660
0
SHARE
Ad

apple-pay-cardsகோலாலம்பூர், பிப்ரவரி 12 – ஆப்பிள் அடுத்ததாக வெளியிட இருக்கும் ஐபோன்களில் கைரேகையை பதிவு செய்யும் சென்சார்களை அமைக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வந்துள்ளன.

இந்த வசதி ஆப்பிளின் 5எஸ் ஐபோன்களில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டாலும், ‘ஆப்பிள் பே’ (Apple Pay) சேவையை மிகச் சிறப்பானதாகவும், துல்லியமானதாகவும் மேம்படுத்த இந்த வசதி உதவும் என்று கூறப்படுகிறது.

மிங் சி க்யோ என்ற தொழில்நுட்ப ஆய்வாளர் ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முயற்சி பற்றி நீண்ட விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதில், “பயனர்களுக்கு ஆப்பிள் பே வசதியை பாதுகப்பானதாகவும், மிகச் சிறந்ததாகவும் மாற்றுவதற்காக ஆப்பிள், இந்த கைரேகை சென்சார் வசதியை மேம்படுத்த இருக்கிறது”.

‘இந்த வசதி இந்த ஆண்டில் ஆப்பிள் அறிமுகப்படுத்தும் ஐபோன்களில் மேம்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன” என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் பே திட்டம், அமெரிக்காவில் பெரும் வரவேற்பை பெற்றது.

apple-pay-walkthrough-1விரல் நுனியில் ஒரே அழுத்தத்தின் மூலம் தேவையான கட்டணங்களை பயனர்கள் செலுத்திக் கொள்ளும் இந்த முறையில், அவ்வபோது சிறிய பிழைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே ஆப்பிள் கைரேகையை பதிவு செய்யும் சென்சார்களை அமைக்க இருப்பதாக க்யோ தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் பெரும்பாலும், தனது ஐபோன்களை செப்டம்பர் மாதமே வெளியிட்டு வருகிறது.

இம்முறையும் ஆப்பிள் தனது அடுத்த தயாரிப்பினை செப்டம்பர் மாதம் வெளியிடலாம் என ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அந்நிறுவனம் அறிமுகப்படுத்திய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் அந்நிறுவனத்திற்கு மிகப் பெரும் வர்த்தகத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.