Home தொழில் நுட்பம் கனடாவில் ‘ஆப்பிள் பே’ சாத்தியமாகுமா?

கனடாவில் ‘ஆப்பிள் பே’ சாத்தியமாகுமா?

758
0
SHARE
Ad

apple-payஒட்டாவா, ஏப்ரல் 18 – ஆப்பிள் நிறுவனம், தனது ‘ஆப்பிள் பே’ (Apple Pay) திட்டத்தை கனடாவில் செயல்படுத்த தீவிரம் காட்டி வருவதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்திய திறன்பேசி வழிக் கட்டணம் செலுத்தும் முறை தான் ஆப்பிள் பே. அமெரிக்காவில் கிரெடிட் கார்டுகள் எனப்படும் கடன் அட்டைகளை முற்றிலும் ஒழித்த பெருமை ஆப்பிள் பே முறையையே சாரும். விரல் நுனியின் ஒரே அழுத்தத்தில் தேவையான கட்டணத்தை செலுத்தி விடலாம் என்பதால், அமெரிக்கர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்பிள் அமெரிக்காவைத் தொடர்ந்து தனது அடுத்த இலக்காக கனடாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதற்கென, ‘ராயல் பேங்க் ஆப் கனடா’  (Royal Bank of Canada), டொரோண்டோ-டொமினியன் வங்கி என ஆறு முக்கிய வங்கிகளுடன் ஆப்பிள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகக் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்த திட்டத்திற்கு மேற்கூறிய வங்கிகள் ஆதரவு அளிக்கத் தயாராக இருந்தாலும், இந்த திட்டத்தில் ஒரு சில பாதுகாப்புக் குறைபாடுகளும், அதிக கட்டண முறைகளும் இருப்பதால், இதனை தொடர்வது குறித்து பல்வேறு விவாதங்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.