இது குறித்து டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், “டைம் இதழின் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது எனக்கு ஆச்சரியத்தையும், பெருமையையும் அளித்துள்ளது. இந்த தருணத்தில் எங்கள் நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்”
“இந்த வருடம், தொடக்கம் முதலே எனக்கு சவால்கள் நிறைந்ததாக இருந்தது. எனினும், என் வாழ்க்கை முழுவதுமே சவால்களும், தடைகளும் நிறைந்த ஒன்றுதான். அதன் மூலம் நான் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளேன்”
“ஏர் ஏசியாவைப் பொறுத்தவரையில் நாங்கள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். எங்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது பற்றிய சிந்தனைகள் எனக்கு எப்பொழுதும் இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
ஏர் ஏசியா இன்று ஆசிய அளவில் சிறந்த மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமாக உள்ளது. ஆனால் கடந்த 2001-ம் ஆண்டிற்கு முன்பு வரை ஏர் ஏசியா கடும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. கமருதீன் பின் மெரனுன் என்ற வணிகருடன் சேர்ந்து ஏர் ஏசியாவை வாங்கிய டோனி பெர்னாண்டஸ், இன்று உலகின் சிறந்த மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமாக அதனை மாற்றி உள்ளார்.