Home நாடு பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அசிஸ் காலமானார்!

பாஸ் ஆன்மீகத் தலைவர் நிக் அசிஸ் காலமானார்!

710
0
SHARE
Ad

Nik Abdul Aziz Nik

கோத்தாபாரு, பிப்ரவரி 12 – பாஸ் கட்சியின் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அசிஸ் நிக் மட் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர்களுள் குறிப்பிடத்தக்கவரான நிக் அசிஸ் இன்று வியாழக்கிழமை இரவு 9.40 மணியளவில் காலமானார் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் மாஃபுஸ் ஓமார் உறுதிப்படுத்தி உள்ளார்.

#TamilSchoolmychoice

அண்மைக்காலமாக கிளந்தானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நிக் அசிஸ். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சில காலத்திற்கு முன்பு தமது தந்தை சுரப்பி வகை (prostate) புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக நிக் அசிஸ் மகன் நிக் முகமட் அப்டு தெரிவித்திருந்தார்.

கிளந்தான் மாநில முன்னாள் மந்திரி பெசாரான நிக் அசிஸ் மறைவுக்கு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நஜிப் அந்த நிகழ்ச்சியை சற்று நிறுத்தி வைத்து விட்டு நிக் அசிசுக்காக தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார் என பெர்னாமா செய்திக் குறிப்பு தெரிவித்தது.