இப்போட்டி பிப்ரவரி 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, கூடவே சில ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள பிரதமர் மோடி, “அமைதியான கேப்டன் மகேந்திரசிங் டோனிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அதிரடியாக விளையாடுங்கள், அணியை நன்கு வழிநடத்துங்கள், இந்தியாவைப் பெருமைப்படுத்துங்கள், நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்”.
“கோலி, உங்கள் மீது ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பிக்கை வைத்திருக்கிறது. தவான், நீங்கள் அதிகமான ரன்களை எடுங்கள், உங்களை உற்சாகப்படுத்த இங்கு நாங்கள் இருக்கிறோம். ரகானே, இந்த மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்”.
“அஸ்வின் உங்கள் சுழற்பந்து வீச்சு மட்டையாளர்களை பீதியை உண்டாக்கி நமக்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும், நன்றாக விளையாடுங்கள்.
மேலும், மோகித் ஷர்மா, முகமது சமி, உமேஷ், ஜடேஜா, ஸ்டுவர்ட் பின்னி, புவனேஸ்வர் ஆகிய வீரர்களுக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
உலககோப்பையில் விளையாடும் இந்திய வீரர்கள் விவரம்:-
டோனி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், வீராட் கோலி, ரெய்னா, ரகானே, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், மொகித்சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர்குமார், அக்ஷர் பட்டேல், அம்பதி ராயுடு.