Home நாடு மஇகா கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு!

மஇகா கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சந்திப்பு!

446
0
SHARE
Ad

MIC-President-Palanivelகோலாலம்பூர், பிப்ரவரி 14 – வழக்கமாக கட்சி தொடர்புடைய செய்தியாளர்கள் சந்திப்புகள் அனைத்தும் மஇகா தலைமையகத்தில் தான் நடைபெறும்.

ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையிலான செய்தியாளர்கள் சந்திப்பு, கோலாலம்பூரிலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் காலை 11 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் கட்சி குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice