Home உலகம் ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு!

ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராக சீனா ஆதரவு!

539
0
SHARE
Ad

india_flag_mapபெய்ஜிங், பிப்ரவரி 14 – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா ஆதரவு அளித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, விரைவில் சீனா செல்ல உள்ள நிலையில், இந்த தகவலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஹுயா சங்யிங் தெரிவித்துள்ளார்.

எனினும், பாகிஸ்தான் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் நியமனம் தொடர்பாக ஹுயா சங்யிங் கூறுகையில், “ஐநா பாதுகாப்பு அமைப்பில் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராவதில் சீனாவுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை”.

“அவர்கள் நிரந்தர உறுப்பினராக நாங்கள் முழுமையாக ஆதரிக்கின்றோம். அதே நேரத்தில் ஜப்பானுக்கு ஆதரவளிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு சீனா பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதற்கு முக்கியக் காரணம், இரு நாடுகளுக்கு இடையே அருணாசல பிரதேசம் மற்றும் காஷ்மீரின் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றம் தான்.

எனினும், கடந்த செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கின், இந்திய வருகையை தொடர்ந்து சீனாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் எதிர்ப்பு:

ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளதாவது:-

“காஷ்மீர் விவகாரத்தில் ஐநா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா, இதுவரை மதிப்பளிக்கவில்லை. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.