Home கலை உலகம் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் நீத்து சந்திரா!

இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார் நீத்து சந்திரா!

778
0
SHARE
Ad

neetu_chandra

சென்னை, பிப்ரவரி 14 – ‘யாவரும் நலம்’ ,’தீராத விளையாட்டு பிள்ளை’,’ஆதிபகவன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நீது சந்திரா. எனினும் தமிழில் முன்னனி நடிகை அளவிற்கு பெரிதாக எந்த பாத்திரமும் பேசப்படவில்லை.

தற்போது புதிதாக ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இதில் நாயகனாக ஆர்கே நடிக்கிறார். படத்தை இயக்க இருக்கிறார் ஷாஜி கைலாஸ்.

#TamilSchoolmychoice

இவர் ஏற்கெனவே ஆர்கே நடிப்பில் ‘எல்லாம் அவன் செயல்’, ‘என் வழி தனி வழி’  உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இதன் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைய உள்ளனர். இந்த படத்தில் தான் நீது சந்திரா ரெட்டை வேடத்தில் நடிக்கிறார்.

வரும் 16-ஆம் தேதி படம் துவங்க உள்ளது. ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவத்தில் ஆரம்பிக்க உள்ள இந்த படத்தில் ஆர்கே, நீது சந்திரா, இனியா, சுஜா வாருண்ணி, கோமல் சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள்.