Home நாடு “எங்களின் கூட்டம் சட்டப்படியானதே!”- 2009 மத்திய செயலவையினர்

“எங்களின் கூட்டம் சட்டப்படியானதே!”- 2009 மத்திய செயலவையினர்

508
0
SHARE
Ad

கோலாலம்பூர், பிப்ரவரி 14 – நேற்று கூடிய 2009ஆம் ஆண்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவையினரின் கூட்டம் அதிகாரபூர்வமானதுதான் என்றும் தங்களின் கூட்டம் சட்டவிரோதமானது அல்ல என்றும் நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய செயலவையினர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தனர்.

MIC“ம.இ.கா வின் மறுதேர்தல் குறித்த எதிரொலியும் அதனால் கட்சியில் ஏற்பட்ட விளைவுகளையும் அனைவரும் அறிவீர்கள். அதன்படி சட்டத்திற்குப் புறம்பானது எது, சட்டத்திற்கு உட்பட்டது எது என்பதனையும் நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். சங்கங்களின் பதிவிலாக பிப்ரவரி 6ஆம் தேதி வெளியிட்ட கடிதத்தின் படி ம.இ.கா வில் மறுதேர்தல் நடக்கும் வரை, ம.இ.கா வின் அடிப்படை நிர்வாகம் மற்றும் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யும் பொறுப்புகள் உள்ளிட்டவற்றை 2009 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்கள் தற்காலிகமாக ஏற்று நடத்துவார்கள் எனத் தெளிவாக சட்டத்திற்குட்பட்டு கூறப்பட்டிருக்கிறது” என அந்த மத்திய செயலவையினர் தெரிவித்தனர்.

“பதவி விலகல் மற்றும் மரணத்தின் காரணங்களினால் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்த்து அவரவர்கள் வகித்து வந்த பதவிகளிலேயே செயல்படுவார்கள் எனவும் சொல்லப் பட்டிருக்கிறது. அதன் படி சக்திவேல்  அந்த காலகட்டங்களில் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த காரணத்தின் அடிப்படையில் 2009ஆம் ஆண்டு மத்திய செயலவையின் அவசர கூட்டத்தைக் கூட்டுவதற்கு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டார். அந்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த கூட்டத்தைக் கூட்டினார். ஆக இந்த கூட்டம் சட்டத்திற்கு உட்பட்டதே என்பதனை மிகத் தெளிவாக விளக்கிக் கொள்கிறோம்” என்றும் அந்த மத்திய செயலவையினர் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice