Home நாடு பிரச்சனைகள் தீரும் வரை தே.மு செயலகம் பொறுப்பில் மஇகா – தெங்கு அட்னான்

பிரச்சனைகள் தீரும் வரை தே.மு செயலகம் பொறுப்பில் மஇகா – தெங்கு அட்னான்

772
0
SHARE
Ad

tengku adnanபுத்ராஜெயா, பிப்ரவரி 16 – முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கும் மஇகா கட்சி விவகாரங்களின் உச்ச கட்ட அதிர்ச்சியாக தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் இன்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், மஇகா பிரச்சனைகள் தீரும் வரை கட்சியை வழிநடத்தும் பொறுப்பை தேசிய முன்னணியின் செயலகம் ஏற்கும் என்று தெங்கு அட்னான் இன்று மதியம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு முன் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் நஜிப்புடன், தெங்கு அட்னான், மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தான் இந்த கூட்டத்திற்கு வர இயலவில்லை என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீஜி. பழனிவேல் கூறியுள்ளார்.

என்றாலும், பின்னர் பழனிவேல் விடுத்த அறிக்கையில், தேசிய முன்னணியின் செயலகம் பொறுப்பில் மஇகா இடைக்காலத்தில் செயல்பட மறுத்துள்ளதோடு, தெங்கு அட்னானுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.