Home உலகம் ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வெளித் தாக்குதலை தொடங்கிய எகிப்து!

ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வெளித் தாக்குதலை தொடங்கிய எகிப்து!

610
0
SHARE
Ad

EgyptF16_25th_700கெய்ரோ, பிப்ரவரி 17 – லிபியாவில் 21 எகிப்தியர்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதன் எதிரொலியாக,  எகிப்து இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் மீது வான்வெளித் தாக்குதலைத் தொடங்கி உள்ளது.

லிபியாவில் கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் எகிப்தை சேர்ந்த எண்ணற்ற காப்டிக் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து மாயமாகி வந்தனர்.

அவர்களின் கடத்தலுக்கு ஐஎஸ்ஐஎஸ் உள்பட பல்வேறு இயக்கங்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்பட்டு வந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் இணைய பக்கத்தில் நேற்று முன்தினம் ஒரு காணொளி வெளியானது.

#TamilSchoolmychoice

isisஅதில் எகிப்து கிறிஸ்தவர்கள் 21 பேர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் வரிசையாக கழுத்தறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டனர். உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்திற்கு எகிப்து அரசு தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டின் அதிபர் அல்-சிசி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் எகிப்து இராணுவம் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள், பயிற்சி நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் ஆகியவற்றை இலக்காக வைத்து வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதில் தீவிரவாதிகள் பலர் உயிரிழந்திருப்பதாக எகிப்து இராணுவம் தெரிவித்துள்ளது.