Home உலகம் உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

உலக கோப்பை கிரிக்கெட்: ஸ்காட்லாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

477
0
SHARE
Ad

Tamil_Daily_News_4895702600480வெலிங்டன், பிப்ரவரி 17 – உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணி 36.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு சுருண்டது. ஸ்காட்லாந்து சார்பில் மத் மசான் 56 ரன்களையும், பெர்ரிங்டன் 50 ரன்களையும், எடுத்தனர்.

#TamilSchoolmychoice

shodlonமற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடிய நியூசிலாந்து அணி,

24.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து தனது 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.